பேசாலையில் 2 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருள்
மன்னார் பேசாலை ஜூட் வீதி பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான 2.70 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பேசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவல் ஒன்றை அடுத்து, நேற்றிரவு பேசாலையில் உள்ள வீடு சோதனையிடப்பட்டுள்ளதுடன் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த 30 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஐஸ் போதைப் பொருள் தொகை இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி வரப்பட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர், இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். பேசசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
