ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான சொகுசு வாகனத்துடன் இருவர் கைது
மட்டக்களப்பு- பாலையடிவட்டை பகுதியில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான சொகுசு வாகனம் மற்றும் வெடி பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (17) அதிகாலை 2.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் விமானப்படை கோப்ரல் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் கைது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாலையடிவட்டை பகுதியில் ரோந்து சென்ற பொலிஸார் அந்தப் பகுதியில் வாகனம் ஒன்றை சோதனை செய்தனர்.

இதன்போது, குறித்த வாகனத்திலிருந்து வெடிபொருட்கள்,வயர்கள்,ஒரு வகையான திரவம் அடங்கிய மூன்று போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வாகனம் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான வாகனம் எனவும் குறித்த நபர்கள் புதையல் எடுக்கும் நோக்குடன் அப்பகுதிக்கு வந்திருக்கலாம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்கள், வாகனம் மற்றும் கைதுசெய்யப்பட்ட நபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri