2.6 வீதமான பணியாளர்கள் மாத்திரமே வருமான வரி செலுத்துகின்றார்கள்:ரஞ்சித் சியம்பலாபிட்டிய விளக்கம்
இலங்கையின் மொத்த பணியாளர்களான 4.64 மில்லியனில் 2.6 வீதமானவர்கள் மாத்திரமே உழைக்கும் போது செலுத்தப்படும் வருமான வரிக்கு உட்பட்டுள்ளனர் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மொத்த பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் மாத சம்பளம் 30,000க்கும் குறைவான சம்பளத்தையே பெறுகின்றனர் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் 4,645,572 பேர் பணியாளர்களாக உள்ளனர். இதில் நாற்பத்தெட்டு சதவீதம் பேர் அல்லது 2,231,620 பேர் மாதந்தோறும் 30,000க்கும் குறைவான சம்பளத்தையே பெறுகின்றனர்.

வரிவிதிப்பு நடவடிக்கை
மாதாந்தம் 100,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டும் 120,965 பேர் அல்லது 2.6 வீதமான பணியாளர்கள் மாத்திரமே வரிக்கு உட்பட்டுள்ளனர்.
ஆண்டுக்கான அரச செலவினம் 5.42 டிரில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அரச வருவாயை 3.65 டிரில்லியன் ரூபாவாக உயர்த்தும் இலக்குக்கு தற்போதைய வரிவிதிப்பு நடவடிக்கைகளைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, 5.8 மில்லியன் குடும்பங்களில் 3.91 மில்லியன் குடும்பங்கள் தமது
வாழ்வாதாரத்தை தொடர்வதற்கு அரச உதவியை நாடுவதாக சியபலாபிட்டிய
சுட்டிக்காட்டியுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 11 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan