இலங்கை மக்களின் மனிதாபிமான செயற்பாடு
இலங்கையில் 22,87,000 பேர் இறந்த பின்னர் கண்களை தானம் செய்வதாக உறுதியளித்துள்ளதாக இலங்கை கண் தான சங்கம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் மட்டும் 200,000 இற்கும் அதிகமானோர் உறுதியளித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் அயோத்தியா சம்பத் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த வழியில் மாதத்திற்கு சுமார் 300 உறுதிமொழிகள் பெறப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
கண் தான சங்கம்
இலங்கையில் உயிரிழந்த 100,000 பேரின் கண்களை 64 ஆண்டுகளாக வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

100,000 கண்கள் தானம் செய்யப்பட்டதை குறிக்கும் வகையில் எதிர்வரும் 30 ஆம் திகதி ஒரு தேசிய விழா நடைபெறும்.
ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களின் தூதர்களும் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என்று கண் தான சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.