திருகோணமலையில் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மறைந்த பெருந்தலைவர் அமரர் இரா.சம்பந்தனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று(6) குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
அஞ்சலி
இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தலைமை தாங்கினார்.
இதன்போது, அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு கூறப்பட்டதுடன் அவர் பற்றிய பேருரையும் நிகழ்த்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருமலை மாநகர சபை முதல்வர் க.செல்வராஜா, கட்சியின் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள்,இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சியின் வட்டார கிளை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 19 நிமிடங்கள் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
