ஐரோப்பாவில் முதன்முறையாக வரலாற்று பதிவினை ஏற்படுத்தியுள்ள இலங்கையர்
ஐரோப்பிய நாடான இத்தாலி இராணுவத்தில் இணைந்த முதல் இலங்கையர் என்ற பெருமையை பினாத் அப்புஹாமி வரலாற்றில் பதிவு செய்துள்ளார்.
பல மாத பயிற்சியின் பின்னர் பினாத் அப்புஹாமி என்ற இலங்கையர் சமீபத்தில் இத்தாலிய இராணுவத்தின் ஜெனரல் கேமர்லெங்கோ மாசிலோ முன்னிலையில் பதவியேற்றார்.
பல வருட அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத உறுதியின் மூலம் அவர் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
குடும்பத்தினருக்கு அர்ப்பணிப்பு
“என் குடும்பம் பல சிரமங்களை சந்தித்தாலும், என் குடும்பத்தினரிடமிருந்து எனக்குக் கிடைத்த ஆதரவுதான் எனது வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
அதற்கு நான் என் மரியாதையை தெரிவிக்க வேண்டும். என் தம்பிக்கும் எனக்கும் ஒரு எதிர்காலத்தை கட்டியெழுப்ப என் பெற்றோர் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தார்கள். எனவே இந்த வெற்றி என்னுடைய வெற்றி மட்டுமல்ல.
இதை என் பெற்றோர், சகோதரர் மற்றும் எனது முழு குடும்பத்திற்கும் கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன்.
எனது வெற்றியின் மூலம் அனைவருக்கும் ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் கனவுகளை நம்புங்கள், அவற்றுக்காக போராடுங்கள்.
எனது வெற்றியிலிருந்து மற்றவர்கள் எடுக்கக்கூடிய முன்மாதிரி, அவற்றை அடைய அச்சமின்றி உழைப்பதாகும்” என பினாத் அப்புஹாமி மேலும் தெரிவித்துள்ளார்.