திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலையின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்
திருகோணமலையில் 2006ம் ஆண்டு படுகொலை செய்யப்பட 05 மாணவர்களின் 19 ஆவது நினைவு நாள் கடந்த 02.01.2025 ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் இடம் பெற்றது.
குறித்த நினைவேந்தலானது இராவணன் சேனா அமைப்பின் தலைவர் கு. செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
குறித்த படுகொலை சம்பவமானது திருகோணமலை கடற்கரையில் வைத்து 02.01.2006 அன்று இடம்பெற்றது.
புனிதஜோசப் கல்லூரி
இதன்போது, திருகோணமலை புனிதஜோசப் கல்லூரி மாணவரான யோகராஜா பூங்குழலோன் என்பவர் காயமடைந்தார். இவரை ஏனைய மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முற்பட்டபோது அப்பகுதிக்கு வந்த சிலர் அங்கு சுமார் 10 நிமிடங்கள் வரை துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடற்கரையில் நின்ற மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடத்தொடங்கினர். இதற்கிடையில் காயமடைந்த மாணவர்களுக்கு அருகில் விரைந்த துப்பாக்கிதாரிகள் அவர்களை நிலத்தில் விழுத்தி கண்மூடித்தனமாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.