நாட்டில் முதன்முறையான உயர் தொழில்நுட்பத்துடன் நோயாளர் காவுவண்டி
இலங்கையில் இலவச சேவையான 1990 சுவ சரியா, நோயாளர் காவுவண்டி சேவையில் செயற்கை தொழில்நுட்பம் (Artificial technology) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி முதலில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படுவதோடு அதன் பின்னர் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்மூலம் நோயாளர் காவுவண்டி இணைக்கப்பட்டுள்ள அனைத்து மருத்துவ உபகரணங்களிலிருந்தும் பெறப்படும் தகவல்கள் மருத்துவரின் கணினித்திரையில் காட்சிப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொழில்நுட்பத்தினால் சிகிச்சை நேயாளருக்கு சிகிச்சை மேற்கொள்வது இலகுவாக அமையும் என்பதுடன் மேலும் சில கூடுதல் தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.
தலைவர் பிரபாகரனை கடல்வழியாக காப்பாற்ற நடந்த கடைசி முயற்சி: மெய்ப்பாதுகாவலர் கூறும் முக்கியமான தகவல் (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |