வரலாற்று சிறப்பு மிக்க கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் திருச்சொரூப பவனி
புதிய இணைப்பு
கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் திருச்சொரூப பவனி சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
கொட்டாஞ்சேனை - புனித லூசியாஸ் தேவாலயத்தில் இருந்து திருச்சொரூப பவனி ஆரம்பமாகியுள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (13) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
திருவிழாத் திருப்பலி ஆராதனைகள் தமிழ் - சிங்கள மொழிகளில் நடைபெற்று வருகின்றது.
திருப்பலி ஆராதனைகள் கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
திருச்சொரூப பவனி
மேலும், முற்பகல் 10 மணிக்கு சிங்களத்திலும் நண்பகல் 12 மணிக்கு ஆங்கிலத்திலும் திருவிழா திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.
இதன்பின்னர் மாலை 5.30 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி ஆரம்பமாகவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
