கல்முனை ஹரீஸ் எம்.பியால் செய்ய முடியாத 19 வருட மருதமுனை சுனாமி வீட்டுத் திட்டத்தை முஷாரப் எம்.பி செய்து முடித்தார்
கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மருதமுனை மக்களுக்காக நிர்மாணிக்கபட்டு கட்டப்பட்ட மேட்டு வட்டை 65 ஆ வீட்டுத்திட்டம் கடந்த 19 வருடங்களாக பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்திருந்தது.
குறித்த வீட்டுத் திட்டத்திற்குரிய பயனாளிகள் தெரிவு செய்யப்படுவதில் தொடர்ந்தும் ஏற்பட்ட இழுபறி நிலை காரணமாகவே இந்த வீடுகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது என்பது ஒரு கதை.
மறுகதை என்பது பல அரசியல் பிரமுகர்களும், அதிகாரிகளும் இந்த வீட்டுத் திட்டத்தை பார்வையிட்டு அதனை விரைவில் வழங்குவோம் என்று கடந்த 19 வருடங்களாக அம்புலி மாமா கதை சொல்லி வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் இன்றுவரை அவர்களால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது.
வீட்டுத்திட்டம்
குறித்த விட்டுத் திட்ட வீடுகள் உரிய மக்களுக்கு வழங்கப்படாமல் இருந்ததனால் அந்த வீடுகள் சேதமடைந்தும் உடைந்தும் அந்த வீடுகளில் இருந்த கதவுகள் மற்றும் கதவு நிலைகள் களவாடப்பட்டு மிகவும் பழுதடைந்த நிலையிலேயே காணப்பட்டது.
இந்நிலையில் கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ஜனாதிபதியினால் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம்.முஷாரப் நியமிக்கப்பட்டிருந்தார்.
அந்த வகையில் கல்முனை பிரதேச அபிவிருத்திக் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் அண்மையில் கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றபோது மருதமுனையை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் மருதமுனை மேட்டுவட்டை 65 கிலோ மீட்டர் வீட்டுத் திட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பியதுடன் எப்போது இந்த வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்படும் என்ற கேள்வியையும் கேட்டிருந்தார்.
இதன் போது நாடாளுமனற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் விளக்கம் அளிக்கும் போது இந்த வீட்டுத் திட்டம் இதுவரை மக்களுக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவது கவலைக்குரிய விடயம். இனியும் இதனை இழுத்தடிக்காமல் உரிய பயனாளிகளை தேர்வு செய்து அந்த வீடுகளை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுயளித்துள்ளார்.
எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் இந்த வீட்டுத் தொகுதி மக்களிடம் கையளிக்கப்படும்.
இதற்காக கல்முனை பிரதேச செயலாளர் உரிய நடவடிக்கைகளை எடுத்து உரிய பயனாளிகளை தெரிவு செய்யும் பட்டியலை பூரணப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக குறித்த வீட்டு திட்டத்தை மக்களுக்கு கையளிப்பதற்காக மருதமுனைக்கு அண்மையில் விஜயம் செய்த எஸ்.எம்.எம்.முஷாரப் 65 மீட்டர் வீட்டுத் திட்டத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் மாவட்ட அரசாங்க அதிபருடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமைகளை விளக்கியுள்ளார்.
இதற்கமைவாக கடந்த பத்தாம் திகதி இந்த வீடுகளை கையளிப்பதற்கான செயற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபுடன் இணைந்து கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார்.
அந்த வகையில் இந்த வீட்டுத் திட்டத்தின் ஒரு தொகுதி வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற விடுகள் கையளிக்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் வீடுகளையும் வழங்கி வைத்தார்.
மக்களிடம் கையளிப்பு
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். குறித்த வீட்டுத் திட்டத்தை மக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கையிலும் ஒழுங்குபடுத்துவதிலும் முழுமையாக செயற்பட்ட கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் ஆகியோரையும் பாராட்டலாம்.
13 வருடங்களாக கல்முனை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கடந்த 13 வருடங்களாக கல்முனை ஹரீஸ் எம்பி தொடர்ச்சியாக வெற்றி பெற்று பிரதி அமைச்சராகவும். ஆளும் தரப்பாகவும் இருந்துள்ளார்.
மகிந்த காலம் தொட்டு மைத்திரி ஆட்சி வரையும் சுப்பர் பவர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார்.இப்போதும் ஜனாதிபதி ரணிலுடன் நெருக்கமாக இருக்கின்றார்.
அம்பாறை அரசாங்க அதிபர் மட்டத்தில் செய்ய வேண்டிய சாதிக்க வேண்டிய இந்த சின்ன விடயத்தை ஒரு மாத காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் செய்து சாதித்துக் காட்டியுள்ளார்.
அப்படியானால் ஒரு மாத காலத்தினுள் நேற்று வந்த முஷாரப் எம்பியால் செய்து சாதித்துக் காட்ட முடியுமானால் இவ்வளவு காலமும் கல்முனை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்மால் ஏன் இதை செய்ய முடியாமல் போனது எனும் கேள்வி பலமாக உள்ளது.
ஜனாதிபதி, அமைச்சர் மட்டுமல்லாமல் அம்பாரை அரச அதிபர் மட்டத்தில் செய்ய செய்ய வேண்டிய இந்த விடயம் ஏன் முடியாமல் போனது? இந்த விடயம் எதிர்வரும் காலங்களில் மருதமுனையில் ஹரீஸ்க்கு தாக்கத்தை ஏற்படுத்தும். முஷாரப் எம்பிக்கு இன்னும் பல விடங்கள் உள்ளது. இவைகளை ஜனாதிபதி மட்டத்தில் செய்து சாதித்துக் காட்டலாம்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலத்தின் கீழ் ஒலுவில் மக்களின் பொன்னம்வெளி காணிப் பிரச்சினை சம்மாந்துறை மக்களின் கரங்கா வட்டை.
பொத்துவில் மக்களின் காணிப் பிரச்சினை போன்றவைகளை கையில் எடுத்து தீர்த்து வைத்தால் கல்முனை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிந்தவூர் பைசல் ஆகியோர்களது வாக்கு வங்கி பெரும் தாக்கத்தை கொண்டு வரும்.
சீ இந்தக் பழம் புளிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் மீது வசை பாடிய எல்லோரும் அவரை தூக்கி வைத்து ஆடும் காலம் ஓன்று வரும். இவர்களை செல்லாக்க காசு ஆக்கலாம் கீரைக் கடைக்கு எதிர்க்கடை இல்லாத காரணத்தினால்தான் இத்தனை ஆண்டுகளாக ஹக்கீம் வகையறாக்கள் இந்தளவு காலா காலமாக பணத்தை அள்ளிவிட்டு வெற்றி பெற்று வருகின்றார்கள்.
சோம்பேறிகளுக்கு வாக்களித்து இந்த மக்கள் கடந்த பலன் என்ன? முஷாரப்பின் செயல்பாடுகள் வெளியில் வராமல் உள்ளதாகவும் செய்தி உள்ளது.
தேர்தல்
மாவட்டம் முழுவதும் முஷாரப் எம்பியின் தேவை தொக்கி நிற்கின்றது.வீதிகள் போடவோ கட்டிடங்கள் கட்டவோ தேவை இல்லை.
மாவட்டம் முழுவதும் தேங்கி கிடக்கும் இப்படியான பணிகளை செய்தாலே போதும். முஷாரப்பின் வாக்கு வங்கி உருவாகும்.
முஷாரப் எம்பியின் சேவை இப்படியாக அதிகரிக்கும் போது முஷாரப் எம்பியின் தேவை மக்கள் மத்தியில் அதிகரிக்கும் .தானாக சேர்ந்த கூட்டமும் அதிகரிக்கும்.
இந்த சோம்பேறிகளை மக்கள மத்தியில் இருந்து நீக்கி முஷாரப் போன்றோர்களை மீண்டும் மீண்டும் கொண்டுவர வேண்டிய தேவை இந்த சமுகத்தின் மத்தியில் அதிகரிக்கும் காலமும் உருவாகும். வீட்டோடு மாப்பிளை என்ற கோணத்தில் எம்பிக்கள் வேண்டாம். எதிர்வரும் காலங்களில் முஷாரம் எம்.பி ஹக்கீம் வர்த்தக கம்பனியில் போட்டியிடலாம்.
ஆனால் மக்கள் வீட்டோடு மாப்பிளை இல்லாமல் இருந்தால் மக்கள் அரவணைக்கலாம் இதற்கும் காலம் பதில் தரும்.

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
