பொலிஸாருக்கு பயந்து மாடியிலிருந்து குதித்த யுவதிக்கு நேர்ந்த கதி
வீடொன்றில் போதைப் பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த யுவதியொருவர் பொலிஸாரிடமிருந்த தப்பிக்க மாடியிலிருந்து குதித்த போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதுக்க பஹல போபே குருன்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம ஹரிபிட்டிய பகுதியில் வீடொன்றில் இரண்டு நபர்களுடன் இணைந்து போதைப் பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த குறித்த யுவதி, பொலிஸார் வீட்டை சுற்றி வளைத்த போது தப்பித்துக் கொள்ளும் நோக்கில் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார்.
இரண்டு ஆண்கள் கைது
இவ்வாறு குதித்த போது மதில் சுவரில் காணப்பட்ட இரும்பு கம்பிகள் வயிற்றில் பட்டதனால் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போதைப் பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த நபர் ஒருவரின் மனைவி தொலைபேசி மூலம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போதைப் பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த ஏனைய இரண்டு ஆண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
