வடமாகாணத்தின் இன்றைய கோவிட் - 19 தொற்று நிலவரம்
வட மாகாணத்தில் மேலும் அறுவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இருந்து இன்றையதினம் வெளியான 442 பேரின் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்போதே அறுவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கும், பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவர் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மல்லாவி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




