வவுனியாவில் தொடர் மழை குறித்து வெளியான தகவல் (Photos)
வவுனியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 189.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (02.02.2023) காலை முதல் இன்று (03.02.2023) காலை வரையான 24 மணித்தியாலயத்தில் குறித்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இன்று காலை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரில் நேற்று முதல் தொடர்ச்சியான மழை பெய்து வருகின்றது. இதனால் பல வீதிகள், தாழ் நிலங்களில் குடியிருக்கும் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும், குளங்கள் நிரம்பி வழிகின்றதுடன், வயல் நிலங்களில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.














தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.