கிளிநொச்சி மாவட்டத்தில் டித்வாவால் ஏற்பட்ட பாதிப்புக்களை நிவர்த்தி செய்ய 187 மில்லியன் ரூபா நிதி
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேசங்களில் சேதமடைந்த உவர் நீர் தடுப்பணைகளை புனரமைப்பதற்கு சுமார் 187 மில்லியன் ரூபா நிதி தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள தகவல்களின் மூலம் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் வெள்ளம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான வீதிகள் பாலங்கள் மற்றும் உட்பட்டுமான வசதிகள் விவசாய நிலங்கள் என்பன கடுமையான சேதத்துக்குள்ளாகியிருந்தன.
கடுமையான சேதங்கள்
குறித்த புயல் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேசங்களில் உள்ள கடற்கரையோரங்களில் காணப்பட்ட உவர் நீர்தடுப்பணைகள் வெள்ளத்தினால் சேதமடைந்து கடல் நீர் உட்புகுந்தமையால் சுமார் இரண்டாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன எதிர்காலத்தில் இவற்றை புனரமைப்பதற்கு சுமார் 187 மில்லியன் ரூபா நிதி தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பூநகரி கம நல சேவை நிலையத்தின் கீழ் உள்ள நல்லூர் கொள்ளக்குறிச்சி செட்டிய குறிச்சி கறுக்காய் தீவு ஞானிமடம் கௌதாரி முனை காத்தவராயர் கட்டு ஆலங்கேணி ஆகிய பகுதிகளில் காணப்பட்ட உவர்நீர் தடுப்பணைகள் சேதமடைந்துள்ளன. இவற்றை புனரமைப்பதற்கு 187 மில்லியன் ரூபா தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.