மதுபானத்தை அழிக்க 1800 மில்லியன் யூரோ ஒதுக்கீடு - பிரான்ஸ் அரசாங்கம் அறிவிப்பு
தேவைக்கு அதிகமாக உள்ள ஒயின் (wine) மதுபானத்தை அழிக்க 1800 மில்லியன் யூரோவை பிரான்ஸ் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் ஒயின் தொழிற்சாலை மிகவும் புகழ் பெற்றவையாக இருக்கும் நிலையில் சென்ற ஆண்டு இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் ஒயின் உட்கொள்வோரின் எண்ணிக்கை சரிந்துள்ளது.
அதிகமானோர் கிராஃப்ட் பீர் (craft beer) மதுபானத்தைக் குடிப்பதால் ஒயினுக்கான தேவை சரிந்துவிட்டதன் காரணமாக அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
ஒயின் உற்பத்தியாளர்கள் பாதிப்பு
மேலும் பிரான்ஸில் ஒயின் உற்பத்தியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். தங்கள் ஒயின்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.
இத்துடன் கோவிட் உள்ளிட்ட வேறு பல பிரச்சினைகளின் காரணமாகவும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சாடுகின்றனர்.
இதையடுத்து உற்பத்தியாளர்களைக் காக்கும் முயற்சியாக ஒயினை அழிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.
போர்டோக்ஸ் மற்றும் லாங்குடாக் உள்ளிட்ட முக்கிய ஒயின் உற்பத்தி செய்யும் பகுதிகள் தேவை குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
