இலங்கையில் அடுத்தடுத்து சிக்கும் வெளிநாட்டு கும்பல் - கொழும்பில் மற்றுமொரு மோசடி அம்பலம்
போலி ஆவணங்களை தயாரித்து இணையவழிப் பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 18 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி, கிரிபத்கொட பகுதிகளில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் நடத்திய சோதனைகளின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாட்டு கடவுச்சீட்டுகள்
கைது செய்யப்பட்டவர்களில் 17 பேர் சீன நாட்டினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 62 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், குற்றங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் மற்றும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 2,000 சிகரெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இணைய மோசடி
போலி ஆவணங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பல சுற்றிவளைப்புக்களில் 500இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குற்றக் கும்பல்கள் இலங்கையை தளமாக கொண்டு பல்வேறு இணைய மோசடிகளில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 17 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri