ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கும் 18 நாடுகள்? வெளியான தகவல்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் போது இலங்கை சார்பாக பேச பதினெட்டு நாடுகள் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தின் உயர்தரப்பு ஒன்றை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நாடுகள் உயர் மட்ட சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளின் போது இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்சனைகள் குறித்து இலங்கை மீது தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்கான முக்கிய நாடுகள் குழுவினரின் முயற்சியை தடுக்க சர்வதேச நாடுகளின் ஆதரவை கோரும் செயற்பாட்டில் இலங்கை அரசாங்கம் ஒரு தீவிரமான சர்வதேச பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.
முக்கிய நாடுகளின் தீர்மானத்தின்படி அதன் உள்ளடக்கம் 2015 இல் நிறைவேற்றப்பட்ட 30-1 தீர்மானத்திற்கு ஒத்ததாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
எனினும் 2019 ல் பதவியேற்ற தற்போதைய அரசாங்கம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகியதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கை குறித்த தனது நிலைப்பாட்டை இந்தியா இதுவரை தெரிவிக்கவில்லை.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான இந்தியாவின் முயற்சியை இலங்கை அரசாங்கம் தடுத்தமை மற்றும் யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் மின் திட்டங்களை செயல்படுத்த சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியமைக்கு மத்தியிலேயே இந்தியாவின் ஆதரவை இலங்கை கோரியுள்ளது.





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
