நீரில் மூழ்கி காணாமல்போன 18 வயது இளைஞன் சடலமாக மீட்பு
கினிகத்தேனை - எபடீன் நீர் வீழ்ச்சியில் நீராடச்சென்று மாயமான இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் நண்பர்களுடன் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி மாயமானதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளன.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பொகவந்தலாவ டின்சின் பிரதேசத்தில் வசிக்கும் கிசான் இனோஜன் வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில் இன்றைய தினம் கடற்படை சுளியோடிகள் வரவழைக்கப்பட்டு தேடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்த நிலையில் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களால் இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 8 மணி நேரம் முன்

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் Cineulagam

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam
