மன்னார் - எருக்கலம்பிட்டி கிராமத்தில் 179 நபர்கள் சுய தனிமைப்படுத்தல்!
மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த கிராமத்தில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 179 நபர்கள் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம் பெற்ற விசேட கலந்துரையாடலினை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போது மன்னார் மாவட்டத்தில் எருக்கலம்பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து செயல்பட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து சுகாதார அதிகாரிகளும் எருக்கலம்பிட்டி கிராமத்திற்கு விஜயம் செய்து குறித்த கிராமத்தை சுய தனிமைப்படுத்தி மாலை 4.30 மணி வரை குறித்த கிராமத்தில் 200 பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதே வேளை மன்னார் நகரில் இன்றுமதியம் சுமார் 200 பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. குறித்த பி.சி.ஆர்.பரிசோதனைகளின் முடிவுகள் இரண்டு தினங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனை தொடர்ந்தே மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். மேலும் எருக்கலம்பிட்டி கிராமத்தில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 179 நபர்கள் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான பி.சி.ஆர்.பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மக்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக இன்று மாலை 4.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள், சுகாதார திணைக்களம் மற்றும் முப்படையினரும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
தொடர்ந்தும் பரவல் ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.


கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri