173 கைதிகள் இன்று விடுதலை(Photo)
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 173 சிறைக்கைதிகள் இன்று(14) விடுவிக்கப்பட்டுள்ளனர் என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், குருவிட்டை, மஹர, நீர்கொழும்பு, வாரியபொல, போகம்பறை, அநுராதபுரம், களுத்துறை, கொழும்பு - மகசீன், தல்தென, வட்டரெக, பதுளை, மாத்தறை, அங்குணகொலபெலஸ்ஸ, பொலனறுவை, கேகாலை, மட்டக்களப்பு, மொனராகலை, பல்லன்சேன, வவுனியா, யாழ்ப்பாணம், காலி, பல்லேகல, திருகோணமலை மற்றும் வீரவில ஆகிய சிறைச்சாலைகளின் கைதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, அபராதம் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக 141 கைதிகளும், 14 நாட்கள் குறைக்கப்பட்டதால் 32 கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகள்-ராகேஷ்
வவுனியா
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து 6 பேர் இன்று (14)
விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில், சிறு குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் அபராதம் செலுத்தாது சிறை தண்டனை பெற்று வந்த கைதிகள் 6 பேர் வவுனியா சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் ந.பிரபாகரன், சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் சந்திரசிறி மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த 6 பேரையும் விடுவித்ததுடன், எதிர்காலத்தில் குற்றங்கள் செய்யாது சமூகத்தில் நற் பிரஜைகளாக வாழ வேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
வவுனியா செய்திகள்-ஷான்,திலீபன்
மட்டக்களப்பு
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 4 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகரவின் வழிகாட்டலில் பிரதம ஜெயிலர் ஆர்.மோகன்ராஜ் முன்னிலையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு செய்தி-ருசாத்
யாழ்ப்பாணம்
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 7 கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்களை புரிந்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறியவர்களே இவ்வாறு சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண செய்தி-தீபன்
தொடர்புடைய செய்தி
பொசன் போயாவை முன்னிட்டு 173 கைதிகள் விடுதலை |