ரஷ்யா-உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த பலர் பலி
ரஷ்யா-உக்ரைன் (Russia-Ukraine) போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு இலங்கை அரசாங்கம் ரஷ்யாவிடம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொய்யான வாக்குறுதிகள்
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த போரில் இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த இரு இரு நாடுகளும் வெளிநாடுகளிலிருந்து தமது நாட்டு இராணுவத்துக்கு ஆட்களை சேர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிக சம்பளம், பாதுகாப்பு உதவியாளர் வேலைவாய்ப்பு என பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, ரஷ்யா தனது இராணுவத்தில் ஆட்களை இணைத்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அவ்வாறு சேர்க்கப்படும் நபர்களுக்கு வலுக்கட்டாயமாக போர்ப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக போர் முனைக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri