டெல்லியில் இடிந்து விழுந்த விமான நிலைய மேற்கூரை
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் மேற்கூரையின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 8 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திரா காந்தி விமான நிலையத்தின் முனையம் 1இல் உள்ள மேற்கூரையே இன்று அதிகாலை இடிந்து விழுந்துள்ளது.
இதனையடுத்து அனைத்து விமானப் புறப்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
டெல்லியில் இடைவிடாத மழை
டெல்லியில் இடைவிடாத மழை பெய்து வரும் நிலையில், இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலையில் இருந்து பெய்த கனமழையின் காரணமாக, டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ன் பழைய புறப்பாடு முனையத்தில் உள்ள மேற்கூரையின் ஒரு பகுதி அதிகாலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது.
டெல்லியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த இரண்டு மணிநேரங்களுக்கு வானிலை ஆய்வு மையம் தீவிரமான மழை தொடரக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர் மழை காரணமாக குறித்த மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam