நுவரெலியா மாவட்டத்தில் 17 அரசியல் கட்சிகள் போட்டியிடத்தகுதி
2024 பொதுத் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் 17 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயேட்சைக் குழுக்களுக்கான வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக இன்று நண்பகல் 12 மணிக்கு நுவரெலியா மாவட்டத்திற்கு, 15 சுயேட்சைக் குழுக்களும், 20 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்தன.
சுயேட்சைக்குழுக்கள்
இதன்படி, 04 சுயேட்சைக் குழுக்கள் மற்றும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி, தேசிய மக்கள் கட்சி மற்றும் அருணலு மக்கள் முன்னணி ஆகியன சமர்ப்பித்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக மக்கள் போராட்டக் கூட்டணி, ஜன சேதா முன்னணி, சோசலிச சமத்துவக் கட்சி, இரண்டாம் தலைமுறை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய ஜனநாயக முன்னணி, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி, சர்வசன அதிகாரம், தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய ஜனநாயகக் குரல், ஜனநாயக தேசியக் கூட்டணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி, சமபீம கட்சி, திராவிட ஐக்கிய விடுதலை முன்னணி, ஐக்கிய சோசலிசக் கட்சி போட்டியிடவுள்ளதுடன், 11 சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிடத்தகுதி பெற்றுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri
