சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலர் நாளை விடுதலை
பொசன் போயவை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 17 பேருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொசன் போயாவை முன்னிட்டு பல வருடங்களாக சிறையிலிருக்கும் 17 முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கவுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலை செய்யப்படவுள்ளவர்கள் விடுதலைப்புலிகளிற்காக செயற்பட்டவர்கள் சிறையில் மிக நீண்ட காலம் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனுபவிக்கவேண்டிய தண்டணை காலத்தை விட அவர்கள் நீண்ட காலம் சிறையிலிருந்துள்ளனர் என தெரிவித்துள்ள அமைச்சர் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளே காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.