கைதான 17 இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்களில் 13 கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டதோடு, ஏனைய நான்கு கடற்றொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்கள் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தலை மன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 17 சந்தேக நபர்களையும் முன்னிலை படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட 17 கடற்றொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.
கடூழிய சிறை
தொடர்ந்து விசாரணைகள்இடம் பெற்று வந்த நிலையில் குறித்த கடற்றொழிலாளர்கள் இன்றைய தினம்(7) மீண்டும் வழக்கு விசாரணைகளுக்கு அழைத்து வரப்பட்டனர்.
விசாரணை முடிவில் குறித்த 17 இந்திய கடற்றொழிலாளர்களிள் இருவர் கைவிரல் அடையாளங்கள் பெறப்படாத காரணங்களினால் அவர்களை எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும்,மேலும் இரண்டு கடற்றொழிலாளர்களுக்கு இரண்டாவது முறையாக எல்லை தாண்டி சட்டவிரோத இழுவை மடி வலையை பயன்படுத்திய குற்றத்திற்காக இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
