17 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு 12 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனை விதிப்பு
இலங்கை கடல் எல்லை பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 17 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் மேலும் ஒரு கடற்றொழிலாளருக்கு இரண்டரை இலட்சம் ரூபா தண்டப் பணமும் விதித்து விடுதலை செய்யுமாறு மன்னார் நீதவான் நீதிமன்ற நேற்று (7) மாலை தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதே நேரம் நபர் ஒருவர் அனுமதி பத்திரம் இன்றி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் இரண்டாவது தடவையாக ஈடுபட்டமை கண்டறியப்பட்ட நிலையில் குறித்த நபருக்கு 24 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
14ஆம் திகதி வரை விளக்கமறியலில்..
குறிப்பாக கடந்த 23.02.2025 தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 32 கடற்தொழிலாளர்களில் நான்கு கடற்றொழிலாளர்கள் முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஏனைய கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரம் கடந்த 02.02.2025 கைது செய்யப்பட்ட 10 இந்திய கடற்றொழிலாளர்களில் 9 பேர் முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதுடன், ஒருவர் இரண்டாவது தடவை இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்டமைக்காக 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 20.02.2025 கைது செய்யப்பட்ட நான்கு கடற்றொழிலாளர்களும் முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு லட்சத்து 50 ஆயிரம் இலட்சம் ரூபா வீதம் தண்டப்பணம் விதிக்கப் பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் நேற்று முன்தினம் மன்னார் தாழ்வுபாடு பகுதியில் கைது செய்யப்பட்ட 14 கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan