நாளொன்றுக்கு 160 மில்லியன் ரூபாய் கூடுதல் வரி வருவாயை வசூலிக்க வேண்டிய கட்டாயத்தில் மதுவரித்திணைக்களம்
புதிய வற் வரி ஒழுங்குமுறைகள் காரணமாக ஜனவரி முதலாம் திகதி முதல் நாளொன்றுக்கு 160 மில்லியன் ரூபாய் கூடுதல் வரி வருவாயை இலங்கை மதுவரித்திணைக்களம் வசூலிக்க வேண்டியுள்ளது.
எனினும் சீருடை பணியாளர்களும் பல உயர்மட்ட பணியாளர்களும் விரைவில் ஓய்வு பெறவுள்ளமையால் இந்த திட்ட இலக்கில் பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திணைக்களத்தின் பணியாளர்கள் ஓய்வு
அடுத்த மூன்று மாதங்களில் திணைக்களத்தின் பெருமளவான பணியாளர்கள் வயது வரம்பின் அடிப்படையில் ஓய்வு பெறப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மூன்று முக்கிய வருவாய் ஈட்டும் ஆயுதங்களில் ஒன்றாக இருக்கும் மதுவரித் திணைக்களம் ஏற்கனவே உயர்மட்ட அதிகாரிகளில் கடுமையான பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் அதன் தலைவர் மற்றும் மதுவரித்திணைக்கள ஆணையர் உட்பட பலர் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் 60 வயது நிறைவடைந்தவுடன் பணிகளில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளனர்.
பதவி உயர்வு
ஓய்வுப்பெறப்போகும் இந்த மூத்த சீருடைப் பணியாளர்கள் அனைவரும் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்கள், அவர்கள் அனைவரும் அடுத்த மூன்று மாதங்களில் ஓய்வு பெறும்போது, சமீப காலத்தில் தரவரிசையில் இருந்து பதவி உயர்வு பெற்ற எஞ்சிய புதிய உதவி ஆணையர்களால் செயற்பாடுகள் நடத்தப்பட வேண்டும்.
இது திணைக்களத்தின் கட்டமைப்புக்கு பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று திணைக்கள தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த டிசம்பர் 31 நிலவரப்படி, திணைக்களம் வசூலிக்க வேண்டிய வரி வருவாய் 500 மில்லியனாக இருந்தது, எனினும் தற்போது வற் வரி விதிப்புடன், இந்த வசூல் 2024 ஜனவரி முதல் 660 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |