சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்ய சென்ற 16 இளைஞர்கள் கைது! (Video)
கேளர கஞ்சா போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை தரிசனம் செய்வதற்காக சென்ற 16 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் மற்றும் மஸ்கெலியா பொலிஸாரினால் நேற்று (08) மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பொலிஸாரினால் 10 பேரும், மஸ்கெலியா பொலிஸாரினால் 06 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இன்று (09) ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர்கள் பொலன்னறுவை, குருணாகலை, மாவனெல்லை உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் 18 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை சிவனொளிபாதமலை புனித பிரதேசத்திற்கு சங்கீத உபகரணங்கள் மது பானங்கள்,பிலாஸ்ரிக் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளன.
குறித்த பொருட்கள் கொண்டு செல்லும் போது மவுசாலை பொலிஸ் சோதனை சாவடியில் அவற்றினை பெற்றுக்கொண்டு மீண்டும் திரும்பி வரும் போது ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


