லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதியை நிலைநாட்டுங்கள்: சஜித் கோரிக்கை

Sri Lanka Police Sajith Premadasa Sri Lanka Journalists In Sri Lanka
By Rakesh Jan 08, 2025 08:45 PM GMT
Report

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் ஆகின்ற நிலையில், உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இந்தக் கொலைக்கான மூல காரணத்தையும், கொலைகாரர்களையும் இதுவரை எந்த அரசாலும் கண்டுபிடிக்க முடியாதுபோயுள்ளன.

வரலாற்றில் முதல் முறையாக அநுர ஏற்படுத்திய மாற்றம்

வரலாற்றில் முதல் முறையாக அநுர ஏற்படுத்திய மாற்றம்

கொடூரத் தாக்குதல்

இந்த விவகாரத்தை அவரது மகள் அஹிம்சா விக்கிரமதுங்க ஐக்கிய நாடுகள் சபையிடம் எடுத்துச் சென்றுள்ளார்.

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதியை நிலைநாட்டுங்கள்: சஜித் கோரிக்கை | 16 Years Since Lasantha Was Murdered

அத்துடன், தனியார்  ஊடகம் ஒன்றின் மீதும், கொடூரத் தாக்குதல் இடம்பெற்றும் 16 வருடங்கள் கடந்துள்ளன.

லசந்த விக்கிரமதுங்க மற்றும் இராஜமகேந்திரன் ஆகியோர் நீதி மற்றும் நியாயத்திற்காக முன் நின்றார்கள்.” என்றார்.

ஹர்ஷன நாணயக்கார

இது தொடர்பில் கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார(Harshana Nanayakkara ), 

“சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் நீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதியை நிலைநாட்டுங்கள்: சஜித் கோரிக்கை | 16 Years Since Lasantha Was Murdered

பல்வேறு காரணிகளால் தாமதப்படுத்தப்பட்டுள்ள வழக்குகள் முறையாக விசாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்போம்.

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை சம்பவம் தொடர்பில் நீதி, நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று ரவூப் ஹக்கீம் கூறினார்.

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை விவகாரத்துக்கு நீதியை நிலைநாட்டுவோம்.

அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அரசு என்ற வகையில் நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும். கடந்த காலங்களில் வழக்குகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன” என்றார்.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஊழல் குற்றச்சாட்டு: கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பு

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஊழல் குற்றச்சாட்டு: கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பு

மேலும், படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 16ஆவது நினைவேந்தல் மற்றும் நீதிகோரிய போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இடம்பெற்றது.

ஊடக அமையம்,மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.

மட்டக்களப்பு ஊடக அமையம்,மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியவற்றின் தலைவர் வா.கிருஸ்ணகுமாரின் ஏற்பாட்டில் சிரேஸ்ட ஊடகவியலாளர் க.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரன், பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

செய்தி - குமார்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US