பாடசாலை மாணவனுக்கு ஹோட்டல் அறையில் காத்திருந்த அதிர்ச்சி
கம்பஹா, பமுனுகம பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலை மாணவனுடன் இணையத்தளம் மூலம் 45 வயதுடைய நபர் ஒருவர் பழகியுள்ளார்.
தடுப்பு காவல்
கடந்த 12ஆம் திகதி அந்த மாணவனை உஸ்வெடகெய்யாவ பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பாடசாலை மாணவனை ஹோட்டலுக்கு அழைத்து வருவதற்கு ஆதரவளித்தமை மற்றும் உடந்தையாக இருந்தமை தொடர்பில் ஹோட்டல் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களும் வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலை மாணவனை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் மற்றுமொரு சந்தேகநபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.