காதலியை 22 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்த காதலன்: டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவில் 16 வயது காதலியைக் கொடூரமாகக் கொலை செய்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (29.05.2023) தலைநகர் டெல்லியில் இடம்பெற்றுள்ளதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த படுகொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளின் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில், 20 வயதான ஷாஹில் என்பவரைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாக்குவாதம்
இதன்போது அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையின் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 16 வயது சிறுமியான நிக்கியும், ஷாஹிலும் காதலித்து வந்துள்ளனர். இருப்பினும் அடிக்கடி இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.
அண்மைய நாட்களாக காதலியான சிறுமி ஷாஹிலுடன் பேசுவதை முற்றிலுமாக நிறுத்தியுள்ளார். இது தொடர்பில் கடந்த 27ஆம் திகதி இது தொடர்பாக இருவருக்கும் இடையே மிகப்பெரிய அளவில் வாக்குவாதங்கள் நடந்துள்ளது.
டெல்லி பொலிஸாரால் கைது
இதனால் ஆத்திரமடைந்த ஷாஹில் நேற்றைய தினம் (29.05.2023) இரவு சிறுமியைப் படுகொலை செய்துள்ளார். சுமார் 22 முறை கத்தியால் குத்திய காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
குறித்த சிறுமி பிறந்தநாள் விழா ஒன்றுக்குச் சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து கொலைக் குற்றவாளியான இளைஞனை டெல்லி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் கையில் பிரவீன் என்று டாட்டூ போடப்பட்டிருந்தது. அந்த டாட்டூ கூட கொலைக்கான காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிப்பதாகக் கூறியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri