இலங்கைக்கான சீனத்தூதுவரினால்16 இலட்சம் தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸிடம் கையளிப்பு
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கோவிட் தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங் தடுப்பூசிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்துள்ளனர்.
வடக்கு கிழக்கினை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கும் நோக்கோடு சுமார் 16 இலட்சம் தடுப்பூசிகளைச் சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கான சீனத் தூதுவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த தடுப்பூசிகள் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில், சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.



SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
