ரணிலுக்கு கரு ஜயசூரிய தலைமையிலான 155 சமூக செயற்பாட்டாளர்கள் அவசர கடிதம்
நாட்டு மக்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்துவதற்கும், 20ஆவது திருத்தச்சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு முன்னாள் சபாநாயகரும், சமூக செயற்பாட்டாளருமான கரு ஜயசூரிய தலைமையிலான 155 சமூகச் செயற்பாட்டாளர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுத்து மூலமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மீதும் அவர் தலைமையிலான அரசாங்கத்தின் மீதும் தொடர்ச்சியாக மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் தற்போது ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும், இதற்கும் பொதுமக்கள் மத்தியில் அதிகமான எதிர்ப்பு எழுந்திருக்கின்றது. இந்நிலையிலேயே முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான 155 பேர் இவ்வாறு கடிதம் ஒன்றை எழுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் அங்கீகரிக்கக்கூடிய அரசாங்கத்தை அமைத்து நிவாரணங்களை வழங்குமாறும் கருஜயசூரிய உள்ளிட்ட 155 சிவில் சமூகப்பிரதிநிதிகள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri