மகாத்மா காந்தியின் 152ஆவது பிறந்த தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு
மகாத்மா காந்தியின் 152ஆவது பிறந்த தினம்
மட்டக்களப்பில்
அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுஷ்டிப்பானது மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவு தூபியில் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு மாநகர முதல்வர், மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியிருந்தார்.
இந்நிகழ்வானது தற்போதைய கோவிட் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு ஐந்து பேரிற்கு மேற்படாதோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.