ஈரானின் இருதயத்தில் ஆட்டம் காட்டிய வல்லரசுக்கள்! வரலாறு காணாத அளவில் சரமாரியாக வீசப்பட்ட ஏவுகணைகள்
மத்திய கிழக்கு போர்க்களத்தில் கடந்த 24 மணிநேரத்தில் வரலாறு காணாத அளவிற்கான வான்வழித் தாக்குதல்கள் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது நடத்தப்பட்டுள்ளன.
சுமார் 150க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் ஒன்றிணைந்து 120க்கும் அதிகமான அதிநவீன ஏவுகணைகளை வீசி ஈரானின் முக்கிய இராணுவக் கட்டமைப்புகளைச் சிதைத்துள்ளன.
நிர்மூலமாக்கப்பட்ட முக்கிய இலக்குகள்
ஈரானின் இராணுவப் பலத்தை முடக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் முக்கிய இடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன:
பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தி மையம் - ஈரானின் நீண்டதூர ஏவுகணைகளுக்குத் தேவையான முக்கிய பாகங்களை உருவாக்கும் அதிமுக்கிய தளம் தகர்க்கப்பட்டது.
⭕️24 HOUR RECAP: 150+ fighter jets have used 120+ munitions in strikes on infrastructure sites in Tehran
— Israel Defense Forces (@IDF) March 29, 2026
Targets included:
• A site for the development of critical components for ballistic missiles
• A site used by the IRGC’s military industries for the research and… pic.twitter.com/Q9wPhJjWLN
IRGC-இன் ஆராய்ச்சி மையம் - ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினரால் (IRGC) ஏவுகணை அமைப்புக்கள் மற்றும் செயற்கைக்கோள் ஏவுகணைகளை (Satellite Launchers) மேம்படுத்தப் பயன்படுத்தப்பட்ட தளம் இலக்கு வைக்கப்பட்டது.
ஆயுத உற்பத்தி தளம் - இராணுவ ஆராய்ச்சி மற்றும் அதிநவீன ஆயுதங்களை உற்பத்தி செய்யும் தளம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெஹ்ரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் வானம் அதிரும் வகையில் தாக்குதல்கள் தொடர்ந்தன.
ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பல ஏவுகணைகளைத் தடுத்ததாகக் கூறினாலும், முக்கிய இராணுவ மையங்கள் பாரிய சேதங்களைச் சந்தித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல், ஈரானின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளியுள்ளதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 12 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam