15 வயது சிறுமி விற்கப்பட்ட விவகாரம் தொடர்பில் 7 பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்து விசாரணை
கொழும்பு - கல்கிஸ்சை பகுதியில் 15 வயது சிறுமி விற்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சுமார் ஏழு பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றதாக தெரியவருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 41 சந்தேக நபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2021, ஜூன் 7ஆம் திகதி 35 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்திருந்தனர்.
சந்தேகநபர்களில் ஒருவரான, பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் தாயார் மற்றும் முக்கிய சந்தேகநபர் ஆகியோரின் தகவல்களின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த சிறுமி தொடர்பில் முக்கிய சந்தேகநபர் இணையத்தளங்களில் ஏராளமான விளம்பரங்களை வெளியிட்டுள்ளார் என்பதும் தொடர்ச்சியாக அம்பலமாகியிருந்தது.
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவ்வப்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில் மிஹிந்தலை பிரதேச சபையின் துணைத் தவிசாளர் மற்றும் மாணிக்க வணிகர், இலங்கை கடற்படையின் இருதய நோய் நிபுணர், மாலைதீவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி ஆகியோரும் அடங்குவர்.
இதேவேளை சிறுமியும் தனது சொந்த தந்தையால் முதன்முதலில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
