நுவரெலியா விபத்தில் 15 பேர் காயம்
நுவரெலியா - ஹைபோரஸ்ட் பிரதேசத்தில் இருந்து ராகலை நகர் நோக்கி சென்ற தனியார் பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 8 மீற்றர் பள்ளத்தில் உள்ள காய்கறி தோட்டத்தில் புரண்டு விழுந்ததில் அதில் பயணித்த 15 பேர் காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலை மற்றும் ஹைபோரஸ்ட் பிரதேச வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று முற்பகல் 11.30 அளவில் ஹைபோரஸ்ட் - ராகலை பிரதான வீதியில் அமைந்துள்ள மஹதுடுகல பிரதேசத்தில் நடந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பிரதேசவாசிகளின் உதவியுடன் அம்பியூலன்ஸ் வண்டியில் மூலம் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடம் என ராகலை பொலிஸார் கூறியுள்ளனர்.
பேருந்தை ஓட்டிச் சென்ற சாரதி ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
