வவுனியாவில் நீர்நிலைக்கு விஷம் கலந்ததால் 12 மாடுகள் பலி(Photos)
வவுனியா, பூம்புகார் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மேய்சலில் ஈடுபட்ட 12 மாடுகள் மரணமடைந்துள்ளதுடன், பல மாடுகள் உடல் சோர்வுற்று அவதிக்குள்ளாகியுள்ளன.
குறித்த கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தினுள் அப்பிரதேசவாசிகளின் மாடுகள் சில உட்புகுந்து அங்குள்ள உழுந்து மற்றும் நெற் பயிர்களை மேய்ந்துள்ளதாகவும், இதனை கண்ணுற்ற விவசாய நில உரிமையாளர் ஆத்திரமடைந்து அம்மாடுகளிற்கு யூரியா மற்றும் பூச்சிகொல்லி மருந்தையும் நீரில் கலந்து குடிக்க வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதனை அம்மாடுகள் பருகி உயிரிழந்துள்ளதாக அக்கிராம கமக்கார அமைப்பினர் மற்றும் மாட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதனைவிட அந்நீரினை பருகிய ஏனைய மாடுகளும் தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் மாட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
இச்சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசாருக்கு மாட்டு உரிமையாளர்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து அவர்கள் நேரில் சென்று நிலமையை பார்வையிட்டதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளினையும் முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன், வவுனியா கால்நடை வைத்திய அதிகாரியும் குறித்த கிராமத்திற்கு சென்று மாடுகளின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் உடற்கூற்று பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
மாடுகள் அருந்திய நீரில் விசம் கலந்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்-ராகேஷ்





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
