14 வயது சிறுமியுடன் தங்கியிருந்த இளைஞன் கைது
மாத்தளையில் வீடொன்றில் 14 வயதுடைய சிறுமி ஒருவருடன் 2 மாதங்கள் தங்கியிருந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த இளைஞனுக்கு உதவிய மேலும் மூன்று நபர்களை அலவத்துகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
அலவத்துகொடையில் வசிக்கும் பெண்ணொருவர் கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இரவு முதல் தனது பேத்தி காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் மேற்கொண்ட விசாரணையில் குறித்த சிறுமி தனது காதலனுடன் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து நேற்றையதினம் (01) பொலிஸ் நிலையத்திற்கு தனது பாட்டியுடன் வந்த குறித்த சிறுமி, தனது 18 வயதுடைய காதலனுடன் சென்று மாத்தளை பிரதேசத்தில் இரண்டு மாதங்களாக வீட்டில் தங்கி இருந்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில், 14 வயது சிறுமியுடன் தங்கியிருந்த குற்றத்திற்காக 18 வயதுடைய காதலனையும், அவருக்கு உதவிய மாத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள இரு வீடுகளுடைய உரிமையாளர்களும், மற்றுமொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களை இன்றையதினம் (02) கண்டி நீதவானிடம் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan