வவுனியாவில் ஐஸ் போதை பொருள் வைத்திருந்த 3 பேர் கைது
ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியா (Vavuniya) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவு, இன்றையதினம் (10.05.2024) வவுனியா நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.ரிஸ்வி தலமையிலான பொலிஸ் இரகசிய தகவலையடுத்து குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மீட்கப்பட்ட போதைப் பொருள்
இந்த இரகசிய தகவலையடுத்து, செட்டிகுளத்தில் வசிக்கும் 35 வயது இளைஞன் ஒருவரை 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
அதனையடுத்து, கைது செய்யப்பட்ட இளைஞன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின், உக்குளாங்குளம், மில் வீதி பகுதியில் வைத்து செட்டிகுளத்தில் வசிக்கும் 36 வயதுடைய இளைஞனும் 12 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மதவுவைத்த குளத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டதுடன், அவருடைய வீட்டில் இருந்து ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |