திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 14 தொற்றாளர்கள்
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 14 தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும்,ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் எட்டு ஆண்களும், ஆறு பெண்களும் கடந்த 24 மணித்தியாலத்தில் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் இன்று (27) வரைக்கும் 4 ஆயிரத்து 365 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும் 94 கர்ப்பிணி தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜூன் முதலாம் திகதி தொடக்கம் இன்று 27 ஆம் திகதி வரைக்கும் 940 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று (27) காலை 10 மணியளவில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இன்று வரைக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 132 பேர் மரணித்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.





அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri
