மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 மாத்தில் 14 சிறுவர் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளனர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 14 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதுடன், 63 சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் ,பெண்களுக்கு எதிராக 1513 குடும்ப வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஜீன் மாதம் 31 ம் திகதி வரையிலான 6 மாதங்களில் மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக முயற்சி,சிறுவர் கடத்தல் போன்ற 31 பெருங்குற்றங்களும், 32 சிறு குற்றங்களுமாக 63 குற்றங்கள் தொடர்பாக முறைப்பாடு கிடைத்துள்ளது.
அதேவேளை, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பாக ஆகக்கூடியதாக ஏறாவூர்; பொலிஸ் பிரிவில் 322 முறைப்பாடுகளும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 186 முறைப்பாடுகளும் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 160 முறைப்பாடுகள் உட்பட 1513 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன் ,பெண்களுக்கு எதிராக 7 பெருங்குற்றங்களும், 71 சிறு குற்றங்களும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறுவர்களுக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை சம்பவங்கள் இந்த கொரோனா காலத்திலும் கூட அதிகரித்துள்ளது கவலைக்குரிய விடயம். இருந்தபோதும் பெற்றோர் பிள்ளைகளை மிகுந்த அவதானத்துடன், கண்காணித்து விழிப்புடன் செயற்படுமாறு அவர் தெரிவித்தார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

இந்த பேரழிவு தரும் இரத்தக்களரி முடிந்ததும்.,புடினுடன் 2 மணிநேரம் பேசிய ட்ரம்ப்: வெளியிட்ட பதிவு News Lankasri
