விடுதலைப்புலிகளின் தலைவர் கூறியதை இந்தியாவில் தேடுகின்றேன்! புலம்பெயர் முக்கியஸ்தர் பகிரங்கம் (VIDEO)
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் கூறியது போலவே நான் இந்தியாவில் 13 ஆவது திருத்த சட்டத்தை தேடுகின்றேன் என பிரான்ஸில் இருக்கும் மனித உரிமைகள் இல்லத்தின் இயக்குநரும்,மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,என்னை இந்தியாவின் அடிவருடி, றோவினுடைய ஆள் என என்னை யாரும் கூறுவார்களாயின் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.காரணம் நான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் கருத்தை மதிப்பவர்.
இந்தியா தற்போது இலங்கைக்கு செய்த உதவியினால் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.எனவே இந்தியா உண்மையில் தனது ஆரதவினை உதவியினை ஈழத்தமிழர்களுக்கு வழங்க வேண்டுமெனில் தீர்மானத்திற்கு ஆதரவளித்து செயற்பட வேண்டும்.
மனித உரிமை சபையில் இந்தியா காரசாரமான அறிக்கையொன்றினை சமர்ப்பித்துள்ள நிலையில்,தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில் இந்தியா தொடர்ந்தும் நடுநிலை வகித்தால் அதனை ஈழத்தமிழர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri