13வது அரசியலமைப்புத் திருத்தம்: ஜெனிவா அமர்வில் இந்தியா வெளியிட்ட அதிருப்தி
13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இலங்கையின் அர்ப்பணிப்பில் முன்னேற்றம் இல்லை என இந்தியா தெரிவித்துள்ளது.
ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியான இந்திராமணி பாண்டே, இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடுகளை இந்தியா கவனத்தில் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
13வது அரசியலமைப்புத் திருத்தம்

13வது அரசியலமைப்புத் திருத்தம், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துதல் ஆகிய உறுதிமொழிகளில் முன்னேற்றம் போதுமானதாக இல்லை.
எனவே இந்த உறுதிமொழிகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு அர்த்தமுள்ள வகையில் செயல்படுமாறு இலங்கையை, இந்தியா வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இலங்கையர்களுக்கும் செழிப்பை அடைவதும், செழிப்பு, கண்ணியம் மற்றும் அமைதிக்கான இலங்கைத் தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை நனவாக்குவதும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் கணிசமான பங்களிப்பு

உடனடி அண்டை நாடாக, 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் நிவாரணம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புச் செயன்முறைகளுக்கு இந்தியா கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளதாக தூதுவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
"இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான நீடித்த மற்றும் பயனுள்ள தீர்வைக் கண்டறிவதில், சமத்துவம், நீதி, அமைதி மற்றும் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றிற்கான தமிழர்களின் அபிலாஷைகளுக்கு நிறைவேற்றுவதை இந்தியா எப்போதும் வலியுறுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்து செயல்படவுள்ளதாக குறிப்பிட்ட அவர், இறுதியில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கான வாக்களிப்பதில் இருந்து இந்தியா விலகிக்கொள்வதாக அறிவித்தார்.
You My Like This Video
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan