ராஜீவ் காந்தியை கொண்டு வந்து ஒப்பந்தம் கைச்சாத்திட்ட ஜெயவர்த்தன! அன்றைய போராட்டம் தொடர்பில் நினைவுபடுத்தும் வெல்கம
ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில், ராஜீவ் காந்தியைக் கொண்டு வந்து அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனை எதிர்த்து புறக்கோட்டை போகா சந்தி அருகே போராட்டம் நடத்தினோம் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மகிந்தவுக்கு நன்கு தெரியும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாங்கள் அப்போது நடத்திய போராட்டம் தொடர்பில் மகிந்த ராஜபக்சவுக்கு நன்கு தெரியும். அங்கு இருந்த பலர் தற்போது உயிரிழந்துள்ளனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். அன்று கிரியெல்லவும் எங்களுடன் இருந்தார்.
மேலும், ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக நாங்கள் போராட்டம் நடத்திய போது தாக்கப்பட்டோம். நாம் அடி வாங்கப் பிறந்தவர்கள். போராட்டத்தின் போதும் எங்களை அடித்தார்கள். இன்னும் சில காலங்களில் இறந்து விடுவோம்.
மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே நீங்கள் இந்தப் பிரச்சினையை முடிக்க வேண்டிய நேரம் இது. அதற்குக் காரணம் நாம் இல்லையென்றால் எதிர்காலத்தில் நம் பிள்ளைகள் பேரக்குழந்தைகளும் அடிபடுவார்கள். அதனை நடக்க விடாதீர்கள். இல்லாவிட்டால் நன்றாக வாழ முடியாது. எனவே இதை எப்படியாவது தீர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




