13ஆம் திருத்த சட்டமும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியலும்!

Srilanka Parliment Tamil National Alliance mahindha
By Dhayani Dec 28, 2021 12:01 AM GMT
Report
Courtesy: பேரசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

ஈழத்தமிழர் அரசியலில் 13ஆம் திருத்தச்சட்டமூலம் அதிக முக்கியத்துவத்தை சமகாலத்தில் ஏற்படுத்தியுள்ளது.

13ஆம் திருத்த சட்டமூலத்தை அங்கீகரித்தல் அதனை எதிர்த்தல் என இரு அணிகள் தமிழரசியல் பரப்பில் உருவாகி வருகிறது.

இதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையும் அதன் பேச்சாளரும் கட்சிகளுடனான சந்திப்பிலும் பொதுவெளியிலும் தேர்தல் விஞ்ஞாபனத்தோடு தொடர்புபடுத்தி தமிழரசுக்கட்சியோ அல்லது தமிழ்த்தேசிய கூட்டமைப்போ 13ஆம் திருத்த சட்டமூலத்தை ஓர் அரசியல் தீர்வாக முன்வைக்கவில்லை என்ற வாதங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இக்கட்டுரையும் அத்தகைய வாதங்களின் உண்மை தன்மையை தேடுவதாக அமைந்துள்ளது.

முதலாவது, அண்மைக்கால கட்டத்தில் நிகழ்ந்த தேர்தல்களில் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடப்பட்ட அதிகாரப்பகிர்வு விடயங்களில் அல்லது அரசியல் தீர்வு விடயங்களில் பிரயோகிக்கப்பட்ட உரையாடலின் அவதானிப்பு அவசியமாகும்.

2013ஆம் ஆண்டு மகாண சபை தேர்தலிலும் 2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13ஐ அடிப்படையாகக்கொண்டே அதிகாரப்பகிர்வு கோரிக்கையை முதன்மைப்படுத்தியுள்ளார்கள்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் Power Sharing என்ற பகுதியில் An arrangement was introduced in 1987 consequent to the Indo-Lanka Accord. These changes paved the way for the setting up of provincial council with minimal powers. . என்ற அடிப்படையிலேயே மாகாண சபைக்கான தேர்தலை தமிழரசுக்கட்சியின் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிர்கொண்டது.

அவ்வாறே 2015ஆம் ஆண்டு தேர்தலிலும் அதே பகுதியை அவ்வாறே முன்மொழிந்திருந்தது.

ஆனால் 2020ஆம் ஆண்டில் அரசியல் தீர்வு தொடர்பான எமது நிலைப்பாடு என்ற பகுதிக்குள் 'ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டிக்கொள்கையை உள்ளடக்கிய அரசியலமைப்பு ஏற்பாட்டு மூலம் மட்டுமே இலங்கை தமிழர்கள் மற்றும் தீவின் வடக்கு-கிழக்கு பகுதியில் வசிக்கும் ஏனைய தமிழ் பேசும் மக்களின் நியாயமான அபிலாசைகளை பூர்த்தி செய்ய முடியுமென' குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய அணுகுமுறையே அனைத்து தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் குறிப்பிட்டுள்ள போதும் 13ஆம் திருத்த சட்டத்தை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்டே தமிழரசுக்கட்சியின் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வரையறுத்துள்ளது.

இரண்டாவது, 13 பற்றிய உரையாடல்களில் பலவீனமான வாதங்களை தமிழ்த்தரப்பு வெளிப்படுத்தினாலும் அத்தகைய 13இன் அடிப்படையிலமைந்த மாகாண சபையை அதற்கான தேர்தலை எதிர்கொண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆட்சி செலுத்தியுள்ளது.

அத்தகைய ஆட்சி அதிகாரத்தை செலுத்துவதென்பது அதனை ஏற்றுக்கொண்டதன் பிரதிபலிப்பாகவே நிகழ்த்தப்பட்டுள்ளது.

அதாவது, 13ஆம் திருத்த சட்டமூலத்தை அடிப்படையாகக்கொண்டே தமிழரசுக்கட்சியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் மாகாண சபையை ஆட்சி செய்துள்ளது.

ஆகவே, அக்கட்சியோ அக்கட்சியின் உறுப்பினர்களோ 13ஐ ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லையென குறிப்பிடுவது பொருத்தமற்ற வாதமாகும். 13 என்பது பிராந்திய அரசான இந்தியாவை அணுகுவதற்கானவொரு அடிப்படை கட்டமைப்பாகும்.

அதுமட்டுமன்றி இலங்கை அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்ட ஒரே அரசியல் தீர்வாக காணப்படுகிறது. ஏற்கனவே, நடைமுறையிலிருக்கும் ஓரு விடயத்தை அதன் கீழ் அதிகார அலகை தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கில் பிரயோசனப்படுத்தி அனுபவித்ததன் பின்னர் அது தீர்வில்லையென விவாதிப்பது பொருத்தமான செய்முறையாக கொள்ள முடியாது.

மூன்றாவது, இலங்கை ஆட்சியாளர்களின் வரலாற்றில் அரசியலமைப்பு என்பது வளர்ச்சிக்குரியது என்ற எண்ணம் இல்லாத நிலையொன்றே காணப்படுகிறது. அதாவது, அரசியலமைப்பின் நியமம் வளர்ச்சியை நோக்கி நகர்வதாகும். ஆனால் இலங்கை அனுபவம் வளர்ச்சிக்கு பதில் De-Evaluate மாதிரியையே பின்பற்றி உள்ளது.

இத்தகைய அணுகுமுறைக்கு Backward என்ற சொற்பிரயோகமும் பயன்படுத்தப்படுகிறது. சோல்பரி அரசியலமைப்பின் கீழ் 29வது திருத்தத்தை 1972ஆம் ஆண்டு அரசியலமைப்பின் வரைபில் இலங்கை ஆட்சியாளர்கள் நீக்கியிருந்தார்கள்.

அதேபோன்றே 13வது அரசியலமைப்பு திருத்தத்தையும்; De-evaluat மாதிரியை பின்பற்றி புதிய அரசியலமைப்பு மாதிரியில் முடிபுக்குக்குள் கொண்டுவர முயலுகிறார்கள். அத்தகைய அணுகுமுறைக்கு தமிழ்த்தலைவர்களும் உடன்படுகிறார்களா என்ற கேள்வி நியாயமானதாகவே உள்ளது. அரசியலமைப்பு வளர்ச்சிக்குரியது.

மேலும் வேறுபாடுடைய இனச் சமூகங்களிடையே சுமுக தன்மையை கட்டி வளர்ப்பதற்கான அணுகுமுறையை உருவாக்குவதே அதன் பிரதான நோக்கமாகும். 13ஆம் திருத்த சட்டமூலத்திலிரந்து சமஷ்டியை நோக்கிய கட்டமைப்பை விருத்தி செய்வதற்கு வழிசமைப்பதே ஆரோக்கியமான அரசியலாகும்.

தமிழ் மக்களுக்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தம் சமஷ்டிக்கான விருப்பை மட்டுமு; கொண்டிருந்தால் போதாது அதை அடைவதற்கான வழிமுறைiயும் கொண்டிருக்க வேண்டும். அதில் 13; இந்தியாவை அணுகுவது பொருத்தமான அணுகுமுறையாகும்.

நான்காவது, 2013ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கின்ற போது '13ஆம் திருத்த சட்டத்தினை ஒழிப்பதற்கு அல்லது பெறுமதியற்றதாக்குவதற்கு ஜனாதிபதி (முன்னாள்) மகிந்த ராஜபக்ஷா முயல்வது மிகவும் ஆச்சரியத்துக்குரிய நடவடிக்கையாகும். இதனை ஒருபோதும் எற்றுக்கொள்ள முடியாது' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று ஜூன்-9, 2019அன்று ஆதவன் செய்தி சேவைக்கு வழங்கிய கருத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் பின்வருமாறு தெரிவித்திருந்தார். '13வது திருத்த சட்டமூலத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென மகிந்த ராஜபக்ஷா அரசாங்கம் இந்தியாவுக்கு உறுதியளித்திருந்தது.

13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் பொறுப்பு தமிழர்களுக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் உரித்துடையதாகும்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அவதானிக்கும் போது 13ஆம் திருத்தம் குறித்து தற்போதைய நிலைப்பாட்டிலும் 2020 வரையான நிலைப்பாட்டிலும் நிலவும் குழப்பம் ஏன் என்ற கேள்வி பொதுவெளியில் அவசியமாகும்.

ஐந்தாவது, 2020இல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் '13வது திருத்தத்தை அரசியலமைப்பிலிருந்த நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் அது மிகப்பெரிய தவறாகும். 13வது திருத்தம் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான இரு தரப்பு உடன்படிக்கைகளை அடிப்படையாகக்கொண்டது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காகவே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது' எனக்குறிப்பிட்டார். இவற்றை அவதானிக்கின்ற போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தற்போது எடுத்திருக்கும் தீர்மானம் அதிக குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.

அதுமட்டுமன்றி பொதுவெளியிலும் கட்சிகளுடனும் உரையாடுகின்ற போது 13 சார்ந்து வெளியிடும் கருத்துக்கள் அதிக முரண்பாட்டை ஏற்படுத்திவருகிறது. அத்தகைய முரண்பாடு ஏன் என்பதே பிரதான கேள்வியாகவுள்ளது.

ஆறாவது, 13வது சீர்திருத்தம் என்பது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக இந்தியாவால் முன்வைக்கப்பட்ட ஒரு விடயமாக மட்டுமே தமிழ் மக்களால் நோக்க முடியும். ஏனெனில் இந்தியா-இலங்கை உடன்படிக்கைக்கூடாக இரு அரசுகளின் நலன்களை அடிப்படையாகக்கொண்டு அவ்வகை உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதனால், அதுவொரு இறுதித்தீர்வாக அமைய முடியாது என்பது நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயமாகும். அது இந்தியாவுக்கும் இலங்கையின் நலன்களுக்குமான உருவாக்கப்பட்டது என்பது மட்டுமன்றி அதில் ஈழத்தமிழர்கள் தமது நலனுக்காக முழுமையாக பயன்படுத்தப்படாத நிலையும் காணப்படுகிறது.

அதாவது, அதனையொரு அரசியலாக முன்னிறுத்தி செயற்படாது வெறுமனே உரையாடலாகவும் தேர்தல் காலங்களில் பிரயோகப்படுத்தப்படும் அம்சமாகவும் பின்பற்றினார்களேயன்றி 13ஐ இந்தியாவுடனான அரசியல் உறவை வளர்ப்பதற்கான கருவியாகவோ அல்லது அதிலிருந்து வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான உத்தியாகவோ பயன்படுத்த தவறியிருந்தனர்.

எப்பேர்தும் அரசியல் திட்ட வரைபுகள் வளர்ச்சி நோக்கிய நியமங்களாகவே காணப்படுகின்றன. ஆனால் இலங்கை அரசாங்கம் மட்டுமன்றி ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளும் வளர்ச்சியை நோக்கி அதனை நகர்த்தவில்லை.

எனவே, 13 என்பது ஈழத்தமிழர் அரசியல் தீர்வுக்கான 1987ஆம் ஆண்டு எட்டப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் விளைவு மட்டுமே. அது இலங்கையின் அரசியலமைப்பு வரைபிலும் நடைமுறையிலும் அதிக தாக்கத்தை செலுத்தி வருகிறது.

அரசியலமைப்பில் நடைமுறையிலிருக்கும் ஓரு விடயத்தை அகற்றுவதென்பது பலவீனமான செய்முறை என்பது மட்டுமன்றி அதனால் எற்படக்கூடிய விளைவுகள் இந்தியாவுடனான உறவினையும் ஈழத்தமிழர் அரசியல் போக்கினையும் நிர்ணயிக்கக்கூடியது.

அதனால் அதன் மீதான விவாதங்களை விடுத்து ஈழத்தமிழருக்கான சாத்தியப்பாடான தீர்வினை நோக்கி கோரிக்கைகளை முன்வைப்பதும் அவற்றை நடைமுறைக்கு ஏற்ற வகையில் கையாள்வதும் அவசியமாகும்.

இன்றைய விவாதம் 13இன் அவசியப்பாட்டை உபாயமாகக்கொண்டு நாடுகளை அணுகவும் தீர்வுகளை எட்டவும் இறுதித்தீர்வுக்குரிய வாய்ப்பினை உருவாக்கவும் முயல்வதே பொருத்தமானதாகும்.

அத்தகைய பிராந்திய பூகோள அரசியல் மாற்றங்கள் வாய்ப்பான சூழலை தந்திருக்கின்றது. அதனை குழப்பாது முன்னோக்கி நகர்த்துவது தமிழ் அரசியல் தலைமைகளுக்குரிய பொறுப்புமாகும்.  

பேரசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US