புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் திருகோணமலையில் பலர் கைது
திருகோணமலை(Trincomalee) - மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 13 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் நேற்றிரவு (11.04.2024) கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இதன்போது இரத்தினபுரி, கேகாலை மற்றும் தெவனிபியவர பகுதிகளில் வசித்து வரும் 21 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட 13 பேரில் நான்கு பேர் மொரவெவ பொலிஸ் பிரிவில் வசித்து வருபவர்கள் எனவும் அவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வாட்ஸ்அப் (Whatsapp) ஊடாக புதையல் தொடர்பில் புகைப்படங்களை பரிமாறிக்கொண்டமை ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் தனித்தனியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் திருகோணமலை நீதிமன்ற நீதிவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam