யாழ்ப்பாணத்தில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி! 73 வயதுடைய வயோதிபர் கைது
யாழ்ப்பாணத்தில் 13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் பிரிவில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த 13 வயது சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாகி உள்ளார் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார்
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் வயோதிபரை கைது செய்துள்ளனர்.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார்
மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் வயோதிபர் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri