13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி - பனன்கம்மன பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனன்கம்மன கிராம அலுவலகர் (473) காரியாலயத்திற்கு உட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதி இன்று 06.05.2021 காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
பனன்கம்மன கிராமப்பகுதியில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைக்கு அமையவே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அந்த பகுதிக்குள் உட் பிரவேசிக்கவும், அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமுலாகியுள்ள பயணத்தடை மீள் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை இப்பகுதியில் 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இன்னும் சிலருக்கு பி.சி.ஆர் பரிசோதனை
மேற்கொள்ளவுள்ளதாகவும் கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்
தெரிவித்துள்ளது.


