வல்வெட்டித்துறையில் வீடொன்றிலிருந்து 13 பேர் ஆயுதங்களுடன் கைது
வல்வெட்டித்துறை - நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 5 வாள்கள், 2 மோட்டார் சைக்கிள் செயின், 6 சரை கஞ்சா மற்றும் ஒரு கிராம் 650 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. பழைய வீடொன்றில் வன்முறைக்கும்பல் ஒன்று வன்முறைக்கு தயாராகி வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் பொலிஸாரும்,இராணுவத்தினரும் இணைந்து வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்கள் 13 பேரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.




ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
